பிரபலமாவதற்காக ஸ்டண்ட்கள் செய்யும் யூடியூப் பிரபலம் ஒருவர், உறையவைக்கும் பனியில் தன் மனைவியை நிற்கவைத்து ஸ்டண்ட் ஒன்றை செய்ய முயன்றுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த Stas Reeflay (30) என்னும் அந்த நபர், Valentina 'Valya' Grigoryeva (28) என்னும் அந்த கர்ப்பிணிப்பெண்ணை கிட்டத்தட்ட நிர்வாணமாக உறையவைக்கும் குளிரில் நிற்கவைத்துள்ளார்

நேரலையில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சிக்காக குளிரில் நின்ற Valentina, hypothermia பிரச்சினையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடனே மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட, அவர்கள் வந்து Valentina இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், Valentina இறந்த பிறகும் இரண்டு மணி நேரத்திற்கு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளார் Reeflay.

Reeflayயை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.