இலங்கையில் புரெவி புயல் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரெவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.