டெல்லி: காஸிப்பூர் - காஸியாபாத் எல்லையில் தடுப்புகளை கொண்டு போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்காக டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் முயற்சி செய்தனர். டெல்லிக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.