மதுரை ஊர்நல அலுவலர் யோகம்மாளுக்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்தது.

உடனே அவர் போலீசாருடன் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றார். அதற்குள் அந்த சிறுமிக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது. சிறுமியை திருமணம் செய்தது குறித்து ஊர்நல அலுவலர் அனைத்து மகளிர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த பொன்மேனி, சொக்கலிங்கநகரை சேர்ந்த வினோத்குமார் (27) மற்றும் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.