சில நபர்களை PCR பரிசோதனைகாக அழைத்திருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு பூராகவும் 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 05 பிரிவுகளும், களுத்துறை மாவடடத்தின் 09 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் கண்டி மாவட்டத்தின் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.