சட்ட, நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன. கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது? என கமல் ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன்
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘சட்டவிசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன. கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது?. பரவாயில்லை, தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.