இந்தியாவில் 2016 ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படி 1.63 மில்லியன் பேர் உயர் இரத்த அழுத்தத்தால் இறந்துள்ளதாக Global Burden of Disease கூறுகிறது.
உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பது பல வகையான உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்ற பிரச்னைகளே அதிகமாக வரக்கூடும். இது ஆண் , பெண் இருவருக்கும் சமமான பிரச்னைகளையே உண்டாக்கும்.
உயர் இரத்த அழுத்தப் பிரச்னை என்பது அதிக உடல் எடை, உடல் உழைப்பு இல்லாமை, முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கை முறை பிரச்னைகளால் உண்டாகிறது. இது தவிர திருமண நிலையும் ஒரு காரணம் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
அதாவது சமீபத்தில் உயர் இரத்த அழுத்த இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் ஆய்வாளர்கள் 45 முதல் 85 வயதுக்கு உட்பட்ட 28,238 பேரை ஆய்வு செய்துள்ளது. அதில் அவர்களுடைய திருமண நிலையும் முக்கிய பங்கு வகிப்பதை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக 28% திருமணம் ஆகாத பெண்கள் அதிக இரத்த அழுத்ததிற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. 33 சதவீதம் கணவரை இழந்த பெண்களும், 21 சதவீதம் விவாகரத்தான பெண்களும் பாதிகப்பட்டுள்ளனர்.
இதிலிருந்து உயர் இரத்த அழுத்தம் பற்றிய ஆய்வில் ஆண்கள் சிங்கிளாக இருப்பதில் நன்மைகளையே பெறுகின்றனர். பெண்கள்தான் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆண்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்பு உள்ளது.
அதேபோல் குறைந்த நண்பர்கள், சமூக வட்டம் கொண்ட பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதன் மூலம் சமூக வட்டம், நண்பர்கள் குழுவும் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வட்டம் அவர்களுக்குத் தேவை என்பதையும் உணர்த்துகிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.