உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 மில்லியனைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து ஏறக்குறைய 10 மாதங்கள் கடந்து விட்ட போதும் அதன் வீரியம் இன்னமும் குறைந்தபாடில்லை. இதனைக் குணப்படுத்துவதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் இன்னும் முழுமையடையவில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 மில்லியனைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 14.58 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவியுள்ளது. அங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கொரோனா பாதிப்பில் உச்சத்தில் இருக்கும் 5 நாடுகளின் விபரங்கள் வருமாறு :
USA 10,873,936
India 8,727,900
Brazil 5,783,647
France 1,898,710
Russia 1,858,568