வங்கிகளில் பணம் எடுப்பதற்கு நாம் எழுதும் Challan மற்றும் Cheque இவற்றினில் Only என்ற வார்த்தையை எதனால் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Only என்ற வார்த்தை எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

பொதுவாக வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க வேண்டுமென்றால் நாம் Chellan அல்லது காசோலை இவற்றினை நிரப்பி கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது.

ஆனால் இவற்றில் தொகை எழுதிய பின்பு ஆங்கிலத்தில் என்றால் Only என்றும், தமிழில் என்றால் மட்டும் என்ற வார்த்தையை கட்டாயமாக எழுதுகின்றோம்.

இவ்வாறு எழுதுவது எதற்காக என்று நாம் பெரும்பாலும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால் அவ்வாறு எழுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் தொகையை மட்டும் எழுதிவிட்டு அப்படியே விட்டுவிட்டால் பின்னால் ஏதேனும் கூடுதல் சொற்களை சேர்த்து தொகையை மாற்ற கூடும் என்பதற்காகவே இவ்வாறு எழுதுகின்றோம்.

அதுமட்டுமின்றி எண்களால் எழுதப்பட்ட தொகையும், எழுத்துகளால் எழுதப்படும் தொகையும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்வதற்கு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றனர்.

வங்கியில் Cheque எழுதும் போது Only என்ற வார்த்தை எதற்காக? பலரும் அறிந்திடாத விடயம் | Why We Write Only In Bank Cheque After Amount

அது மட்டுமின்றி சொற்களை எழுதும் போது அதிக இடைவெளி விடாமல் எழுதுவது அவசியம். ஏனெனில் மற்றவர்கள் இடையே வேறு ஏதேனும் சொல்லை சேர்த்து தொகையை எடுக்க வாய்ப்புள்ளது.

அதே போன்று Rupees என்ற வார்த்தைக்கு அருகிலேயே தொகையை எழுதுவதற்கு தொடங்க வேண்டும். இறுதியில் Only என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

வங்கியில் Cheque எழுதும் போது Only என்ற வார்த்தை எதற்காக? பலரும் அறிந்திடாத விடயம் | Why We Write Only In Bank Cheque After Amount

இவை கட்டாயமாக்கப்பட்ட விதியாக இருந்தாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் நமது பாதுகாப்பிற்காக இதனை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

ஆதலால் காசோலையை நிரப்பும் போது தேவையற்ற காலி இடங்களை விடாமலும், தேதி, பெயர், தொகை இவற்றினை சரியாக எழுதியுள்ளீர்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.