முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது.

வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.

இவ்வாறு பச்சை முட்டையை ஆம்லெட் செய்து சாப்பிட்டிருக்கும் நபர்கள், அவித்த முட்டையில் ஆம்லெட் செய்து சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு அவித்த முட்டையில் ஆம்லெட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா? வெறும் 10 நிமிஷம் போதும் | How To Make Boiled Egg Omelette Recipe

தேவையான பொருட்கள்

1/2 ஸ்பூன் கடலை எண்ணெய்
சிறிதளவு கறிவேப்பிலை (நறுக்கியது)
1/2 பச்சை மிளகாய், நறுக்கியது
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 சிறிய தக்காளி பொடியாக நறுக்கியது
1/4 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
1 வேகவைத்த முட்டை (பொடியாக நறுக்கியது)
1/2 ஸ்பூன் வேர்க்கடலை எண்ணெய்
1 முட்டை
1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
1/4 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் பால்

அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா? வெறும் 10 நிமிஷம் போதும் | How To Make Boiled Egg Omelette Recipe

செய்முறை

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, விதைகள் நீக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

கடைசியாக வேக வைத்த முட்டையை சேர்த்து சில நொடிகள் சேர்த்து வதக்கினால் ஆம்லெட்டிற்கான மசாலா தயார்.

அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா? வெறும் 10 நிமிஷம் போதும் | How To Make Boiled Egg Omelette Recipe

பவுல் ஒன்றினை எடுத்துக்கொண்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். பின்பு மிளகு தூள், உப்பு, பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். பால் இல்லையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதனை ஆம்லெட்டாக போட்டு, அதன் மீது வதக்கிய வைத்த அவித்த முட்டை மசாலாவை நன்றாக பரப்பிவிட்டு திருப்பி போடவும்.

ஒரு நிமிடம் மட்டும் வேக வைத்து எடுத்தால் சுவையான அவித்த முட்டை ஆம்லெட் தயார்.