பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் அடுத்த கவின் - லாஸ்லியா உருவாகிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி 25 நாட்கள் கடந்துவிட்டன. தற்போது பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்க போட்டிகள் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் பணப்பெட்டி முதல் முறையாக முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணப்பெட்டியை குமரன் எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தன் தந்தையின் உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருக்க வேண்டும் என்று கூறிய குமரன் மன வருத்தத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் முனியம்மா ஆட்டமாக ஆடி வருகிறார். எல்லோர் தவறையும் சுட்டிக்காட்டி வெளுத்தி வாங்கி வருகிறார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாவின்யா வெளியே செல்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பிக்பாஸ் போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட நபர்களான சாவின்யா, ஜாவித், லட்சுமி பிரியா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் யார் இந்த போட்டிக்கு வொர்த் இல்லையோ அவர்களை ஒரு கயிறு கொண்டு தங்கள் கையுடன் இணைத்து கொள்வார்கள்.
இறுதியில் யார் வெளியேற நினைக்கிறார்களோ அவர்கள் தங்கள் கயிற்றை அவிழ்த்துவிட்டு வெளியேறலாம். இதில், சாவின்யா அஸ்மிதாவுடன் தனது கையை இணைத்து கொண்டார். இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வாரம் சாவின்யா வெளியே செல்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அடுத்த கவின் - லாஸ்லியா உருவாகி வருவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, ஷாதிகா - முகேஷ் இருவரும் க்ளோஸாக உள்ள நிலையில், இவர்கள் தான் அடுத்த லாஸ்லியா - கவின் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் இது வெறும் கண்டெண்டாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
