பல படங்களில் காமெடி மற்றும் குணச்சிதிர வேடங்களில் நடித்துள்ள சுந்தர்ராஜன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவரது மேடை பேச்சுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவரும், பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமான சுந்தர்ராஜன் தனக்கு பெயர் வைத்தஆ யார் என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் மறைந்த இயக்குனர் பாக்யராஜூவின் பள்ளிகாலம் முதல் சினிமாவில் இருந்தவது வரை நெருங்கிய நண்பராக இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். 1981-ம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றிருந்தார். வெள்ளிவழா நாயகன் மோகன் இந்த படத்தில் நாயகானக நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து சரணாலயம், நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சிதிர வேடங்களில் நடித்துள்ள சுந்தர்ராஜன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவரது மேடை பேச்சுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் பேசிய இவர், தனக்கு பெயர் வைத்தது யார் என்ற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதரில் 1951-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நான் பிறந்தேன். 7-ந் தேதி பாக்யராஜ் பிறந்தான் என்னை விட 2 நாட்கள் மூத்தவன். அந்த காலத்தில் குழந்தைக்கு பெயர் வைப்பது என்றால், தாய் மாமன் மடியில் உட்கார வைத்து விமர்சையாக கொண்டாட்டத்துடன் பெயர் வைப்பார்கள். நான் பிறந்து 4 மாதங்களுக்கு பிறகு வீட்டில் ரேஷன் கார்டு வாங்க சென்றிருந்தோம். 

நான் 4 மாத குழந்தை என் அம்மா என்னை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு போனார். அப்போது என் அப்பா பெயர், அண்ணன் பெயர், எங்க அம்மா பெயர் எல்லாம் சொல்லி கடைசியில் என் பெயர் வந்தபோது, இன்னும் பெயர் வைக்கவில்லை என்று என் அம்மா சொன்னார். ஆனால் பெயர் இருந்தால் தான் ரேஷன் கார்டு கிடைக்கும் என்று அதிகாரி சொல்ல, எங்க அம்மாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. 

அப்போது ரேஷன் கடைக்காரர் வந்து இப்போதைக்கு சுந்தர்ராஜன் என்று பெயர் எழுதிக்கொள்கிறோம். யாராவது வந்து சுந்தர்ராஜன் வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டால் இருக்கிறார் என்று சொல்லுங்கள் என்று சொன்னார். அப்படி ரேஷன் கடைக்காரர் வைத்த பெயர் தான் இப்போது இருக்கிறது. நாள் நட்சத்திரம், ஜாதகம் பார்த்து இப்போது பெயர் வைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.