பொதுவாவே காலை உணவை சுவை நிறைந்ததாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்ததாவும் தயாரிக்க வேண்டும் என்பது ஒவ்டிவொரு அம்மாக்களுக்கும் இருக்கும் மிகப்பெரும் போராட்டம்.

அந்தவகையில், காலை உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ எளிதில் செய்து சாப்பிடக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த  உணவுகளில் முட்டை அவல் உப்புமாவும் ஒன்று. குறைந்த நேரத்தில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இந்த உப்புமாவைத் தயாரிக்கலாம்.

அவலும் முட்டையும் இருந்தால் போதும்... வெறும் 10 நிமிடங்களில் சுவையான உப்புமா ரெடி! | Tasty And Healthy Egg Aval Upma

முட்டையுடன் அவல் சேர்த்து செய்வதால் சுவையாகவும், வயிறு நிறைவாகவும் இருக்கும். முட்டை அவல் உப்புமாவை எளிய முறையில் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 1

கொத்து தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

முட்டை – 3

உப்பு – தேவையான அளவு

அவல் – 1/2 கப்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

அவலும் முட்டையும் இருந்தால் போதும்... வெறும் 10 நிமிடங்களில் சுவையான உப்புமா ரெடி! | Tasty And Healthy Egg Aval Upma

செய்முறை

முதலில் அவலை நன்றாக ஒருமுறை கழுவி, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதமாகும் வரை நன்றாக வதக்கவும்.

அவலும் முட்டையும் இருந்தால் போதும்... வெறும் 10 நிமிடங்களில் சுவையான உப்புமா ரெடி! | Tasty And Healthy Egg Aval Upma

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அது நன்றாக குழையும்வரை வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.

முட்டை நன்றாக வெந்ததும், ஊற வைத்த அவலை தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து சில நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித்தழையைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை அவல் உப்புமா தயார்.