சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சேயோன் திரைப்படம்

‘தாய்க்கிழவி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவகுமார் முருகேசன், அடுத்ததாக ‘சேயோன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? | Seyon Shooting Spot Actor Seeman Photos Viral

 

இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.

மும்முரமாக நடைபெறும் படப்பிடிப்பு ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மண்ணின் பாரம்பரியம், கிராமத்து வாழ்வியல் மற்றும் அப்பகுதியின் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு, பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு முக்கியமான ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? | Seyon Shooting Spot Actor Seeman Photos Viral

 

முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்

இந்நிலையில், ‘சேயோன்’ படத்தில் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக இயங்கி வரும் சீமான், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், ‘சேயோன்’ படத்தில் அவரது பங்களிப்பு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் படக்குழு, இப்படத்தில் சீமான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் அவர் கிராமத்து பின்னணிக்கு ஏற்ற தோற்றத்தில் காணப்பட்டார்.

இந்த தோற்றம் வெளியானதைத் தொடர்ந்து, சீமானின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? | Seyon Shooting Spot Actor Seeman Photos Viral

 

வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்

தற்போது ‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் சீமான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பில் அவர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன், இணையத்திலும் வேகமாகப் பரவி வருகின்றன.

வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா? | Seyon Shooting Spot Actor Seeman Photos Viral

இதற்கிடையே, இப்படத்தில் சீமான், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.