world's highest-paid political leader: உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவராக அறியப்படும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டு சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பள உயர்வின் மூலம், பிரதமரின் ஆண்டு சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்துள்ளது.

உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? | Worlds Highest Paid Prime Minister Awrence Wong

இந்திய ரூபாய் மதிப்பில் இது தோராயமாக ரூ.26.9 கோடியாகும். அதாவது, ஒரு ஆண்டில் ரூ.26 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறும் உலகின் முக்கிய அரசுத் தலைவராக லாரன்ஸ் வோங் தொடர்ந்தும் தன் நிலையை தக்கவைத்துள்ளார்.

பின்னணி காரணம்

சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்தச் சம்பள உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திறமையும் தகுதியும் கொண்டவர்களை அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளுக்கு ஈர்ப்பதற்கும், அவர்கள் நீண்ட காலம் அரசுப் பணியில் தொடர்வதை உறுதி செய்வதற்கும், ஊழலைத் தடுப்பதற்கும் இந்தச் சம்பள உயர்வு அவசியம் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? | Worlds Highest Paid Prime Minister Awrence Wong

எனினும், நாட்டில் தற்போது நிலவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, இந்தச் சம்பள உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்தச் சம்பள உயர்வின் மூலம் தனக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? | Worlds Highest Paid Prime Minister Awrence Wong

மேலும், சிங்கப்பூரில் பிரதமருக்கு மட்டுமல்லாமல், அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.