ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல்மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகு ராஜயோகங்களும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தகையில், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், வளர்ச்சி, முன்னேற்றம், அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், கல்வி, குழந்தைகள் மற்றும் தொழிலின் காரணியாக விளங்குகிறார்.

சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்! | Jupiter Transit In Leo Who Get Career Growth

இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், சனி, ராகு, கேதுவுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிப்பவர். தற்போது உச்ச ராசியான கடகத்தில் பயணிக்கும் குரு பகவான், அக்டோபர் 31-ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து, ஜனவரி 25, 2027 வரை அங்கு இருப்பார்.

பின்னர் வக்ர நிலையில் மீண்டும் கடக ராசியை அடைவார். சிம்ம ராசிக்குள் குரு நுழைவதால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் காணப்பட்டாலும், குறிப்பாக  இந்த 4 ராசிக்காரர்கள் குருவின் அருளால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

[HP4OC7K ]

மேஷம்

சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்! | Jupiter Transit In Leo Who Get Career Growth

குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மேஷ ராசியின் 5-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாகவும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்

சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்! | Jupiter Transit In Leo Who Get Career Growth

 

குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் கடக ராசியின் 2-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சியும், வியாபாரத்தில் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தானாகவே அமையும்.

மேலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கலாம். அந்த நட்பின் மூலம் நிதி நிலையில் வளர்ச்சியடையக்கூடிய  வாய்ப்பு உருவாகும். 

துலாம்

சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்! | Jupiter Transit In Leo Who Get Career Growth

குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் துலாம் ராசியின் 11-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

குறிப்பாக, வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாகவும் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் உருவாகும் புதிய தொடர்புகள் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.மொத்தத்தில், தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும்.

சிம்மம்

குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் சிம்ம ராசியின் முதல் வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தலைமைத்துவ திறன்களும் மேம்படும். குருவின் அருளால் சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

வருமானத்திலும் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் பணப் பிரச்சனைகள் குறைந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.