யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கின் ஒரு பகுதியில் கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதானம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த மைதானத்திற்கு கண்காணிப்பிற்காக சென்றிருந்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

விரைவில், தேசிய ரீதியிலான கால்பந்து தொடர் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய அணி ஒன்றும் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான வசதிகள் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.