ஷெஹ்னாஸ் கில்
பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்தும் பின்னணி பாடகியாக திகழ்ந்தும் பிரபலமானவர் தான் நடிகை ஷெஹ்னாஸ் கில்.

பிக்பாஸ் இந்தி சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான ஷெஹ்னாஸ் கில், இஷ்க்னாமா என்ற படத்தின் ஷுட்டிங்கின் போது இந்த காலத்தில் ராணிக்கள் பயன்படுத்தும் உடை, விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு ஒரு காட்சியில் ஓடி வரும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக நடிகை ஷெஹ்னாஸ், மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி திடீரென கழன்று, ஓடும் வேகத்தில் அப்படியே அவரது வாய்க்குள் விழுந்து தொண்டையில் சென்றுள்ளது. மூக்குத்தி வாய்க்குள் சென்றதால் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார்.
பயங்கரமாக இரும தொடங்கிய அவரை பார்த்து ஷூட்டிங்கில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் உறைந்து நின்றுள்ளனர். அருகில் இருந்த சக நடிகர் செளரப் சச்தேவா என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, சொல்ல முடியாமல் ஷெஹ்னாஸ் கில் இருமத் தொடங்கினார்.

உடனடியாக ஓடிவந்த நடிகர், அவரின் முதுகில் தட்டி அந்த மூக்குத்தியை வெளியே எடுக்க உதவி செய்தார். இதனால் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் பதறிப்போயுள்ளனர். அங்கு நடந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகை ஷெஹ்னாஸ் கில்.
