இலங்கை கடற்பரப்பில் தீ பரவல் ஏற்பட்ட நியூ டைமண்ட் கப்பல் இந்தியப் பெருங்கடல் முழுவதுமான நீண்ட பயணத்திற்குப் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளது.
குறித்த கப்பல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புஜைராவில் நங்கூரமிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவிற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த குறித்த கப்பல், இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி தீ விபத்துக்குள்ளானது.
தீ பரவியபோது குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் பயணித்து என்றும் கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட கோளாறே தீ பரவ காரணம் என்றும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.