கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது.

ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.

13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி! | 13 Year Old Mother Case To Get Her 7 Month Baby

தகவல்களின்படி, பங்களதேஷை சேர்ந்த  ஜூய் 11 வயதாக இருந்தபோது, Facebook மூலம் 22 வயதுடைய ஷகிப் மியாவுடன் அறிமுகமானார். பின்னர் அந்த அறிமுகம் திருமணத்தில் முடிந்தது. திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில காலத்திலேயே, ஜூயை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அதைவிட வேதனையானது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டதுதான்.

ஒரு தாய்க்கு தனது குழந்தையிலிருந்து பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய மனவேதனை என்பதை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தனது குழந்தையை மீண்டும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஜூய் சட்டத்தின் உதவியை நாடினார்.

நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது குழந்தையைத் திரும்பப் பெறுவதற்காக போராடினார். இறுதியில், அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம், அந்த 7 மாதக் குழந்தை மீண்டும் ஜூயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. தாயன்புக்கு வயது என்ற வரம்பே கிடையாது. தாய் பதின்ம வயதுப் பெண்ணாக இருந்தாலும், முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும், தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும் பாசமும் ஒன்றுதான்.