இந்து சாஸ்திரங்களின் படி, தொன்றுதொட்டு பல நம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நம்மைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள், தெய்வீக ஆற்றல் எப்போதும் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
அவ்வாறாக, இரவு நேரங்களில் வீட்டில் சில குறிப்பிட்ட சத்தங்கள் கேட்பதற்கு சாஸ்திரங்களின்படி என்ன அர்த்தம் கூறப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் சத்தங்கள்
சங்கு ஒலி: இரவு நேரத்தில் வீட்டில் சங்கு ஒலி கேட்பது, சிவபெருமானின் அருள் எப்போதும் நம்மீது பரிபூரணமாக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
கொலுசு சத்தம்: இரவில் கொலுசு சத்தம் கேட்பதாக உணர்ந்தால், நம் வீட்டைச் சுற்றி தெய்வ நடமாட்டம் இருப்பதையும், குலதெய்வத்தின் அருள் எப்போதும் நம்மைக் காத்து வருவதையும் உணர்த்துவதாக நம்பப்படுகிறது.
கோவில் மணி ஓசை: இரவு நேரத்தில் கோவில் மணி ஒலி கேட்பது, அதிர்ஷ்டமும் நற்செய்திகளும் நம்மை நோக்கி வருவதற்கான அறிகுறியாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

அதேபோல், சில நேரங்களில் எந்தவித வெளிப்படையான காரணமும் இல்லாமல் விபூதி, சந்தனம் போன்ற தெய்வீக நறுமணங்களை உணரலாம். இத்தகைய நறுமணங்களும் நம்மைச் சுற்றி தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதற்கான அறிகுறிகளாக நம்பப்படுகின்றன.
