தங்க நகையை அணிந்து குளிக்கும் போது அதன் பளபளப்பு குறைந்துவிடுமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தங்க நகை

பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தங்க நகை மீது அலாதி பிரியம் இருக்கும். தங்க நகையை அணிவதற்கு பலரும் விரும்பும் நிலையில், வீட்டில் எப்பொழுதும் அணிந்து கொண்டும் இருக்கின்றனர்.

குளிக்கும் போது தங்க நகையை கழற்றாமல் அணிவதும் பொதுவாக பழக்கமாக இருக்கின்றது. ஆனால் இவை மெதுவாக பாதிப்பினை ஏற்படுத்துமாம். 

தங்க நகை அணிந்து குளிப்பவரா நீங்கள்? நகையின் அழகே போயிடுமாம் | Gold Jewellery Does Wearing Bathing Reduce Shine

குளியல் சோப்பு, ஷாம்பு, பாடி வாஸ் நகை இடுக்குகளில் படிந்து இறக்கையான பளபளப்பனை மறைத்து, மங்கலான தோற்றத்தினை அளிக்கின்றது. இதனால் நாளடைவில் நகையின் அழகும் குறைந்துவிடும்.

கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அல்லது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளின் இடுக்குகளில் எளிதாக படிமங்கள் சேர்கின்றது. 22 காரட் தங்க நகைகள் அதிக மென்மை கொண்டதாக இருப்பதால் இந்த வேதிப்பொருட்கள் எளிதில் பொலிவை இழக்க செய்துவிடுமாம். 

 

எந்த நகையை குளிக்கும் போது கழற்ற வேண்டும்?

கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், முத்துகள், பவளம் போன்றவற்றினை குளிக்கும் போது கட்டாயம் கழற்ற வேண்டும். 

அதே போன்று நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கம்மல், மெல்லிய செயின் இவைகள் எளிதில் உடைந்து போகலாம். ஆதலால் குளிப்பதற்கு முன்பு அவற்றையும் கழற்றி வைப்பது நல்லது.

நாம் தினமும் அணியும் தங்க நகையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம் ஆகும். அதாவது வெதுவெதுப்பான தண்ணீரில் லேசான சோப்பு கரைசலை கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து, மென்மையான பல் துலக்கும் பிரஷ்ஷால் கழுவி, துணியால் துடைத்து எடுக்கவும். 

தங்க நகை அணிந்து குளிப்பவரா நீங்கள்? நகையின் அழகே போயிடுமாம் | Gold Jewellery Does Wearing Bathing Reduce Shine

ரசாயனங்கள் கொண்ட கிளீனர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் நகையின் ஆயுளை நிச்சயம் குறைத்துவிடுமாம்.

தங்க நகை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், சமையல் செய்யும் போது, குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் வேலைகளில் கழற்றி வைப்பது நல்லது.

நகைகளை ஒன்றோடு ஒன்று உரசி கீரல்கள் ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு தனித்தனியாக பெட்டியில் வைக்கவும். வருடத்திற்கு ஒருமுறை அனுபவம் வாய்ந்த நகைக்கடைகளில் சுத்தம் செய்து கொள்ளவும். 

தங்க நகை அணிந்து குளிப்பவரா நீங்கள்? நகையின் அழகே போயிடுமாம் | Gold Jewellery Does Wearing Bathing Reduce Shine