உடல் எடை குறைப்பது தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். சிலர் உடல் எடை குறைக்க உடற்பயிற்ச்சி செய்வது முதல் மிக கடினமான டயட்டுக்களை இருந்து வருகின்றனர்.

ஆனால் நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான விதிமுறைகளை ஒருங்காக பின்பற்ற வேண்டும். இதில் மிக முக்கியமானது நாம் எவ்வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது தான்.
உடல் எடை குறைப்பில் இருக்கும் ஒருவர் அவருடைய உணவில் அதீத கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை அவர்கள் சேர்த்துக்கொள்ளும் போது அது அவர்களின் உடல் எடை குறைப்பின் பயணத்தில் சிறந்த பங்களிப்பை தரும்.

பசலைக்கீரை குறைந்த கலோரி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த ஓட்டத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்த உதவும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாகும். இதை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருப்பதுடன், உடலுக்கு வலிமையையும் அளிக்க உதவுகிறது.

உடல் எடை குறைப்பில் இருப்பவர்கள் அவல் சாப்பிடுவது நல்லது. அவலில் இருக்கும் குறைந்த கலோரி உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது.

அடுத்தது பாசிப்பயறு இதில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதை நாம் சாப்பிடும் போது இது நமது பசியை கட்டுப்படத்தி அதிகமாக நாம் உணவுண்பதை தவிர்க்கும். அதிலும் நீங்கள் முளைகட்டிய பயறு சாப்பிட்டால் அது உண்மையில் அதிக பலன் தரும்.

புரோக்கோழி உடல் எடை குறைப்பில் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வு. இது நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது. இதில் உள்ள சல்போரோஃபேன், உடலில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை ஊக்குவிக்க உதவுகிறது. இதனால் கெட்ட கொழுப்பு கரையும். வைட்டமின் சி மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது. இதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைப்பில் இருப்பவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வு. இதில் புரதம், வைட்டமின்கள், செலினியம், ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. எனவே தினசரி உடற்பயிற்சியுடன் காலை உணவில் முட்டையைச் சேர்த்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.

வாழைப்பழம் நமக்கு எளிதில் கிடைக்ககூடிய ஒரு பழமாகும். இதை நாம் குறைந்த விலையிலும் வாங்கலாம். உடலை கட்டுபாட்டில் வைத்திருப்பதில் வாழைப்பழத்திற்கு அதிக பங்கு உண்டு. நடுத்தர அளவிலான ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரியும் 3 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. எனவே வாழைப்பழத்தை தயிர், பாலாடைக்கட்டி அல்லது ஓட்மீலுடன் சேர்த்து சாப்பிட்டால் மேலும் சத்தான காலை உணவாக இருக்கும்.

கேரட் கிழங்கு வகைகளில் ஒன்றாகும். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகளவு உள்ளது. கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இது நமது உடலில் பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

பைபர் (நார்ச்சத்து) அதிகம் நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தந்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மெதுவாக செரிமானம் ஆகுவதால் ரத்தச் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. இதனால் உடல் எடையை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.

பச்சை பட்டாணியில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுவதுடன், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் பயனளிக்கிறது. மேலும், இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இனிப்புச் சுவை கொண்டிருந்தாலும், அளவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைக்கும் உணவுப் பட்டியலில் சிறந்த இடம் பெறுகிறது.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி மிகவும் குறைவாகவும் உள்ளது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உணவு செரிமானத்தை மேம்படுத்துவதால் கலோரி எரிப்பு சீராக நடைபெற உதவுகிறது. தினசரி உணவில் வெள்ளரிக்காயைச் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்தையும் எடை மேலாண்மையையும் ஆதரிக்கும்.
