பிரபல ரிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலமான யுதன் பாலாஜி வெளிநாட்டில் என்ன செய்கின்றார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

யுதன் பாலாஜி

பிரபல ரிவியில் கடந்த 2006ம் ஆண்டு கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் யுதன் பாலாஜி.

பின்பு 2009ம் ஆண்டு பட்டாளம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றிபடமாக இருந்தது.

பட்டாளம் பட வெற்றிக்கு பின்பு தொடர்ந்து காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். இதில் நடிகை மேக்னா ராஜ் நடித்த நிலையில் இப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

பின்பு மெய்யழகி, நகர்வலம் போன்ற படங்களில் நடித்த பாலாஜி, பிரபல ரிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ், வெள்ள ராஜா வெப் தொடரிலும் நடித்தார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் மேக்னாராஜ் பேசுகையில், பாலாஜியை தொடர்வு கொண்டுள்ளார். அதில் பேசிய பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டிலாகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அங்கு அரசின் சைபர் கிரைம் பாதுகாப்பு துறையில் ஹேக்கராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.