உலகின் மிக வரண்ட பாலைவனமான அட்டாகாமா பாலைவனத்தில் தற்போது 200 வகைக்கும் அதிகமான பூக்கள் பூத்துள்ளது.

அட்டகாமா பாலைவனம்
இயற்கைதான் உலகில் உள்ள சக்திகளிலேயே மிகவும் வலிமையானது என்று சொல்வார்கள். உலகின் மிக வரண்ட இடம் தான் அட்டாகாமா பாலைவனம்.
இது பூமியின் மிகவும் வறண்ட பகுதி என்று அறியப்படும் வடக்கு சிலியில் உள்ள பாலைவனம்.
ஆனால் தற்போது இதில் 200 ற்கும் அதிகமான பூக்கள் பூத்திருக்கிறது அது எப்படி என்பது தான் கேள்வியே.

அட்டகாமா பாலைவனத்தின் நிலம் மிகவும் வறண்டு இருப்பதால், சூரிய மண்டலத்தில் உள்ள மற்றொரு கிரகமான செவ்வாயின்
நிலைமைகளை உருவகப்படுத்திப் பார்ப்பதற்கான ஒரு ஆய்வகமாக இது அறிவியலுக்குப் பயன்படுகிறது. இங்கு பல ஆண்டுகளாக மழையே பெய்யாத பகுதிகளும் உள்ளன.

பூக்கள் எப்படி பூக்கின்றது?
பாலைவன மண்ணில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் விதைகள், நீண்ட காலத்திற்கு, சில சமயங்களில் பல ஆண்டுகள் கூட, செயலற்ற நிலையில் இருக்கின்றன.
கடுமையான வெப்பம் மற்றும் நீர்ப் பற்றாக்குறையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் இயற்கையான இயங்குமுறைகளைக் கொண்டுள்ள அவை, சரியான நேரத்தையும் மழையையும் எதிர்பார்த்து உயிருடன் இருக்கின்றன.

இந்த அசாதாரண மழை பெய்யும்போது, சுழற்சி தொடங்குகிறது. பாலைவனம் மீண்டும் வறண்டு போவதற்கு முன்பு கிடைக்கும் குறுகிய கால நீர் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, விதைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி விரைவாக முளைக்கத் தொடங்குகின்றன.
பாலைவனத்தில் பூக்கள் முழுமையாகப் பூப்பதற்கு, குறிப்பாக சரியான மாதங்களில், 15 முதல் 30 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு இருப்பதுடன், எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாத வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் கலவையும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அபூர்வ நிகழ்வு கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 15 முறை மட்டுமே பதிவாகியுள்ளது.
