ராகு நட்சத்திர பெயர்ச்சி ஜூன் 30ஆம் தேதி நடக்கிறது. ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை பெறுவார்கள். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

 

ராகு பெயர்ச்சி

ஜோதிடத்தில் முக்கியமான கிரகங்களாகக் கருதப்படும் ராகு, கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாறுவதுடன், இடையிடையே நட்சத்திரப் பெயர்ச்சியும் அடைகின்றனர்.

அந்த வகையில், ஜூன் 30ஆம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால் அங்காரக யோகம் உருவாகிறது.

இது டிசம்பர் 2ம் திகதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் சில ராசிகள் தங்கள் தொழில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ராகு பெயர்ச்சி கொடுக்கும் அசுப யோகம் - இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் | Rahu Nakshatra Peyarchi July 30Th Negative Vibe

மேஷம்

  • அங்காரக யோகத்தால் நிதி மற்றும் உடல்நல விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
  • முதலீடு, பணம் கடன் கொடுத்தல் மற்றும் அவசர நிதி முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து கவலை ஏற்படலாம்.
  • உடன்பிறந்தவர்களால் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது.
  • பழைய சிறிய பிரச்சினைகள் தீர்ந்தாலும், தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படலாம்.

தனுசு

  • அங்காரக யோகத்தால் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • அவசர முடிவுகள், புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் அழுத்தம் அதிகரிக்கலாம்.
  • பொறுமையுடன் செயல்படுங்கள்.
  • பேச்சில் கட்டுப்பாடு அவசியம்.
  • உறவுகளில் கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சினைகள் மற்றும் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்

  • அங்காரக யோகத்தால் இந்த காலம் சற்று சவாலானதாக இருக்கும்.
  • முதலீடு, கடன் வாங்குதல் அல்லது கொடுத்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • பழைய கடன் பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.
  • பணியிடத்தில் முன்னேற்றம் தாமதமாகலாம்.
  • உடல்நலம் மற்றும் மனஅழுத்தத்தில் கவனம் தேவை.
  • பேச்சில் நிதானம் கடைப்பிடித்து, வாக்குவாதம் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

  • அங்காரக யோகத்தால் சவால்கள் அதிகரிக்கலாம்.
  • பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  • அதிக செலவால் நிதிச் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
  • அவசர முடிவுகளைத் தவிர்த்து, தொழிலில் கவனமாக செயல்படுவது நல்லது.
  • தொடர்ந்து முயற்சி செய்தால் தடைகளை சமாளிக்க முடியும்.