சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இன்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் எனவும் தொடர்ந்து, குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
பின்னர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த முதலமைச்சர் விஜய், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் சந்தித்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றபின் முதன் முறையாக குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
