தைராய்டு பிரச்சனை உள்ளவர்களின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தைராய்டு பிரச்சனை

இன்று பெரும்பாலான பெண்களின் பிரச்சனையாக தைராய்டு உள்ளது. தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும்.

இவை உடலில் மெட்டாபாலிசம், ஆற்றல் உற்பத்தி, இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, ஹார்மோன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ்வாறு பல பணிகளை செய்யும் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் பல உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றது. அவ்வாறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.

 

இரண்டு வகையான தைராய்டு

தைராய்டு குறைபாடுகள் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது. ஹைப்போது மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்பதாகும். இதில் ஹைப்போ என்பது ஹார்மோன் குறைவாக இருப்பதாகும். அதுவே ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருப்பதை குறிக்கின்றது.

ஹைப்போ தைராய்டிசம்

ஹைப்போ தைராய்டிசத்தின் போது சில அறிகுறிகள் நம்மால் உணர முடிகின்றது. உடல் எடை அதிகரித்தல், உடல் சோர்வு, தோல் உலர்தல், முடி உதிர்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், குளிரை தாங்க முடியாமை போன்றவை ஆகும்.

ஹைப்பர் தைராய்டிசம்

ஹைப்பர் தைராய்டிச பிரச்சனையின் அறிகுறிகளாக, உடல் எடை குறைதல், பதட்டம், இதய துடிப்பு அதிகரித்தல், அதிக வியர்வை, கை நடுக்கம், தூக்கமின்மை, அதிக வெப்பத்தை தாங்க முடியாத போன்றவை ஆகும்.

தைராய்டு பிரச்சனை உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? முழு விபரம் இதோ | How Thyroid Problem Affects Your Body Health

 

தைராய்டு பிரச்சனையால், செரிமானம், கருத்தரிப்பு திறன், மனநலம் மற்றும் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. பெண்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனில் இவை கர்ப்ப கால சிக்கல்களும் காணப்படும்.

சிகிச்சை பெறாத தைராய்டு கோளாடு காரணமாக அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் மற்றும் எலும்பு மெலிதல் பிரச்சனைகள் ஏற்படும்.

இதற்கான முன்னெச்சரிக்கை என்னவெனில், சமநிலையான உணவுமுறை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. குறிப்பாக ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் அயோடின், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், மீன், முட்டை, பருப்பு, பால் பொருட்கள் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தைராய்டு பிரச்சனை உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? முழு விபரம் இதோ | How Thyroid Problem Affects Your Body Health

உணவு கட்டுப்பாடுடன் போதிய தூக்கம் மற்றும் மன அழுத்தத்தினை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

தைராய்டு பிரச்சனை உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? முழு விபரம் இதோ | How Thyroid Problem Affects Your Body Health