சுவையான மட்டன் குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மட்டன் குருமா

பொதுவாகவே அனைவருக்கும் சைவத்தை விட அசைவம் தான் பிடிக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாருடைய வீட்டிலேயும் அசைவம் தான் இருக்கும்.

அசைவத்தில் அதிகம் விரும்பி சாப்பிடுவது மட்டன். மட்டன் குழம்பமாக தான் அனைவரும் வைத்து சாப்பிட்டிருப்பார்கள். இத்தருணத்தில் மட்டன் குருமா செய்து அசத்தலாம்.

  இதை நாம் இட்லி மற்றும் தோசைக்கு சைடிஷாக வைத்துச் சாப்பிடலாம். 

 

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு... 

 மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
 உப்பு - 1 டீஸ்பூன்

சுவையான மட்டன் குருமா இப்படி செஞ்சு பாருங்க..இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும். | How To Prepare Tasty Mutton Kuruma For Idli Dosa

மசாலா அரைப்பதற்கு...

 பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் 
 சோம்பு - 1 டீஸ்பூன் 
 கசகசா - 2 டீஸ்பூன் 
 முந்திரி - 6 
 தண்ணீர் - சிறிது
தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

 

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

 பிரியாணி இலை - 1 
 பட்டை - 2 துண்டு
 கிராம்பு - 4
ஏலக்காய் - 2 
 அன்னாசிப்பூ - 1 
 மராட்டி மொக்கு - 1 
 கல்பாசி - சிறிய துண்டு
ஜாவித்ரி - சிறிய துண்டு 
 பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (கீறியது) 
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
 தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது) 
 ஊற வைத்த மட்டன் 
 உப்பு - சுவைக்கேற்ப
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 
 சுடுநீர் - 1 1/2 கப்
 அரைத்த மசாலா

 

செய்முறை:

முதலில் நாம் வாங்கிட்டு வந்த மட்டனை நன்கு கழுவி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, சேர்த்து அதை நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதை ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்க வேண்டும்.

சுவையான மட்டன் குருமா இப்படி செஞ்சு பாருங்க..இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும். | How To Prepare Tasty Mutton Kuruma For Idli Dosa

 

அது நன்கு வதக்கிய பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

பின் நாம் ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதில் மல்லித் தூள், கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு குக்கரை மூடி அதை வேக வைக்க வேண்டும்.

அது நன்கு வெந்ததும் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான மற்றும் சுவைாயன மட்டன் குருமா ரெடி.