நடிகர் அஜித்தின் தாயார் மோகினி அம்மையார் நேற்றைய தினம் காலமானதையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக இணைந்து அஜித் வீட்டிற்குச் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
விஜய் - த்ரிஷா அஞ்சலி
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகிணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பலரும் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்குமாரின் நெருங்கிய நண்பரும், முதலமைச்சருமான விஜயும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மோகினியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அஜித்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பயணித்த வாகனத்திலேயே நடிகை த்ரிஷாவும் சென்று இருந்தார். இறுதியாக அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வாசல் வரை வந்து, முதலமைச்சர் விஜயை வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே விஜய்- த்ரிஷா குறித்த ஏராளமான சர்ச்சைகள் இணையத்தில் வலம் வரும் சமயத்தில், துக்க வீட்டிற்கும் விஜய் த்ரிஷாவுடன் சென்ற விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
