நடிகை நயன்தாரா தனது காதல் கணவன் விக்கி மற்றும் அன்பு குழந்தைகளுடன் வித்தியாசமாக் போட்டோ ஷூட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை நயன்தாரா
லேடிசூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் சினிமாவிரல் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகின்றார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் பிரம்மாண்ட செலவில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த காதல் ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

இவர் பாலிவுட்டில் அறிமுகமான ஜவான் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; இறுதியாக டெஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவர்களுடன் செலவிடும் அழகிய தருணங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்களுடனும் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில், 41 வயதிலும் குறையாத இளைமையுடன் ஜொலித்து வரும் நயன்தாரா தனது காதல் கணவனுடன் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியில் ரொமான்டிக்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
