தங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு, இந்த அதிக புரதச்சத்து நிறைந்த உணவு மிகவும் பொருத்தமானவை...

பனீர்

பனீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கின்றது. கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

அசைவ பிரியர்களின் புரதச்சத்தை பூர்த்தி செய்வதற்கு பனீர் மிகவும் உதவியாக இருக்கின்றது. பனீரை பல வகைகளில் சமைத்து சாப்பிடும் நிலையில், பனீர் பெப்பர் வறுவல் பலரது விருப்ப தெரிவாக இருக்கின்றது.  

அப்படி புரதசத்து கொண்ட பனீர் பெபர் வறுவல் எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.

புரதசத்து நிறைந்த பனீர் பெப்பர் வறுவல் எப்படி செய்யனும்னு தெரியுளுமா? | How To Prepare Protein Rich Paneer Pepper Fry

தேவையான பொருட்கள் :

பனீர் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப

சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

புரதசத்து நிறைந்த பனீர் பெப்பர் வறுவல் எப்படி செய்யனும்னு தெரியுளுமா? | How To Prepare Protein Rich Paneer Pepper Fry

செய்முறை :

முதலில் நாம் வாங்கிட்டு வந்த பன்னீரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு வானொலியில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு நமக்கு தேவையான மசாசலா பொருட்களான மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். 

புரதசத்து நிறைந்த பனீர் பெப்பர் வறுவல் எப்படி செய்யனும்னு தெரியுளுமா? | How To Prepare Protein Rich Paneer Pepper Fry

பின்னர் அதில் தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் நாம் ஊறவைத்த பனீர் தூண்டுகளை சேர்க்கவும்.தண்ணீர் வற்றியவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து இறக்கினால் சுவையான பனீர் பெப்பர் வறுவல் ரெடி.