பூண்டின் நறுமணத்துடனும், வெண்ணெய்யின் சுவையில் கார்லிக் நாண் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கார்லிக் நாண்

இந்திய மக்களின் உணவுப்பட்டியலில் பரோட்டா அல்லது நாண் தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இவற்றுடன் சத்தான காய்கறி குருமா செய்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.

அதிலும் கார்லிக் நாண் தந்தூரியில் மட்டுமே செய்ய முடியும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் சாதாரண வாணலியில் கூட கார்லிக் நாண் செய்யலாம்.

கார்லிக் நாண் பூண்டின் மணத்துடன், வெண்ணெய்யின் நறுமணத்துடன், மென்மையாக பஞ்சு போன்ற உட்புறத்தினைக் கொண்டுள்ளதால் அனைவருக்கும் பிடித்த உணவாகவே இருக்கின்றது.   

தேவையான பொருட்கள்

மைதா - அரை கிலோ
தயிர் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
ஈஸ்ட் - விருப்பத்திற்கு ஏற்ப சிறிதளவு
வெண்ணெய் - 3 ஸ்பூன்
பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது) 

Butter Garlic Naan ஒருமுறை இப்படி செய்து பாருங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது | How To Prepare Tasty Garlic Naan At Home

எவ்வாறு மாவு தயாரிப்பது?

நாண் செய்வதற்கு மாவு தயாரிக்கும் பக்குவம் மிகவும் முக்கியம் ஆகும். பவுல் ஒன்றில் மைதாவை சேர்த்து இதனுடன் உப்பு மற்றும் எண்ணெய், சிறிதளவு தயிர் இவற்றினை சேர்த்து சற்று பிசுபிசுப்புடன், மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் கடினமாக வரும் என்பதால், மாவை பிசைந்த பின்பு அதனை மென்மையாக்குவது மிகவும் அவசியமாகும்.

Butter Garlic Naan ஒருமுறை இப்படி செய்து பாருங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது | How To Prepare Tasty Garlic Naan At Home

மாவை பிசைந்து சுமார் 1 முதல் 2 மணி நேரம் கட்டாயம் ஊற வைக்கவும். இதனை நாம் செய்யவில்லையெனில் நான் மென்மையாக வராது. 

வெண்ணெய்யை உருக வைத்துவிட்டு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

Butter Garlic Naan ஒருமுறை இப்படி செய்து பாருங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது | How To Prepare Tasty Garlic Naan At Home

நாண் ரொட்டியை வட்டமாக உருட்டுவதைவிட நீள்வட்டமாக உருட்டுவது சிறந்தது. நாண் ரொட்டி தயாரானவுடன் அதன் மீது இந்த பூண்டு வெண்ணெய் கலவையை மேலே தடவி சாப்பிடலாம்.

எப்பொழுதும் சப்பாத்தி செய்வதைப் போன்று தோசைக்கல்லை பயன்படுத்தி இதனை சுட்டு எடுக்கலாம்