பொதுவாகவே இல்லதரசிகளுக்கு இருக்கு பெரிய பிச்சினைகளில் ஒன்று தான் மதியம் சமையலுக்கு என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்வது.
தினமும் சமையில் செய்து அழுத்து போய் இருக்கும் அவர்களுக்கு கோடை வெயிலும் கூட சேர்ந்துக்கொண்டால் சொல்லவும் வேண்டுமா? மேலும் சமையல் மீது சலிப்பை ஏற்படுத்திவிடுகின்றது.
அப்படியான நேரங்களில் சமையலறையில் அதிக நேரம் செலவிடாமலேயே மதிய உணவுக்கு அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு தயிர் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
பெரிய உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது)
உப்பு - சிறிது
கடுகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
புளிப்பில்லாத கெட்டி தயிர் - 400 மிலி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்றாக வதக்கி ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன் பின்னர் நன்றாக வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி, புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து கலந்துவிட்டு லேசாக சூடானதும் இறக்கினால், அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு தயிர் குழம்பு தயார்.
