நேற்று தமிழகத்தில் நடந்த வாக்கு பதிவில் நடிகை த்ரிஷாவும் தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு மக்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
நடிகை த்ரிஷா
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கி முடிந்தது.
இதில் பல திரை பிரபலங்கள் வாக்களித்துவிட்டு சென்றனர். அதில் த்ரிஷாவும் ஒருவர்.
நடிகை த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் பல சர்ச்சைகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வந்தது. சங்கீதா, விஜய் வேறொரு நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விஜய்க்கு எதிராக விவாகரத்து கேட்டு கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன் பின்னர் விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து சர்ச்சைகள் எழும்பின. பின்னர் த்ரிஷாவும் விஜய்யும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதுவும் ஒரே நிற ஆடையில் இப்படி இருக்க தற்போது தமிழக வாக்குபதிவு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
நடிகர் கமல் கவுதமி, ஸ்ருதிஹாசன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, சூர்யா, சிவகுமார், டி.ஆர். ராஜேந்திரன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இவர்களை போலவே காலை 11 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார்.
தனது தாயுடன் வாக்கு செலுத்த வந்திருந்தார் த்ரிஷா. இதன்போது பத்திரிக்கையாளர்கள் 'மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா'? எனக் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த திரிஷா, "கண்டிப்பாக அனைவரும் வாக்கு செலுத்துங்கள். அதனை மட்டும் இன்றைக்கு சொல்வேன்" என்று பதிலளித்தார்.
பலரும் இதற்கு பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் த்ரிஷா மறைமுகமாக எதாவது சொல்கிறாரா? என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
