ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் பலரும் பாராட்டு தெரிவித்தனர். பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மிக சிறப்பான படம் என்றும் குறிப்பாக ஜோதிகாவின் நடிப்பு மிக அருமையாக இருந்தது என்றும் இயக்குனரின் பெடரிக் இந்த படத்தை மிகச்சிறப்பாக இயக்கி உள்ளார் என்றும் இந்த படத்தின் முழு டீமுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியிருந்தார்
சரத்குமாரின் இந்த விமர்சனத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ’சூர்யா டுவிட்டரில் இருக்கின்றார் தானே, அவருடைய டிவிட்டர் அக்கவுண்டுக்கு டேக் செய்து போடுடா’ என்று ஒருமையில் அநாகரீகமாக ஒரு கமெண்ட்டை பதிவு செய்திருந்தார். இந்த கமெண்டுக்கு பதிலடி கொடுத்த சரத்குமார் ’டுவிட்டை ஒழுங்கா பாத்தியாடா’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர் ’யா௫க்கு வாழ்த்து சொல்றிங்க, யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற, தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க.. அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள். தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா’ என்று பதிவு செய்ததற்கு ’கண்டிப்பாக சகோதரா’ என்று மரியாதையுடன் சரத்குமார் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது