கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வயது இடைவெளியானது பாரிய தாக்கத்தை செலுத்தாது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாப்பிரேம தெரிவித்தார்.

தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும்போாத அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று வயது கூடியவர்களையே அதிகம் தாக்கும் என பொதுவான கருத்தொன்று நிலவும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சமீப காலமாக சடுதியாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் இதுவரையில் 11 ஆயிரத்து 335 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 21 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.