பொதுவாக சிலரின் வாழ்க்கை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவை போன்று அமைந்திருக்கும். ஏனெனின் இவர்கள் பிறந்த எண் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
அதே சமயம் அவர்களின் வாழ்க்கையின் இலட்சியங்களையும் நிறைவேற்றும். கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்தியில் நமது செயல்கள் நல்லவையாக மாற்றப்படுகிறது.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இறைவன் துணையாக இருப்பார்.
நியூமராலஜி படி, குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் தன்னுடைய பார்வையால் மற்றவர்களை ஈர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அப்படியானவர்கள் பிறந்த தேதி என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

| எண் 9 | 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பாக மற்றவர்களிடம் நடந்து கொள்வார்கள். தனக்கு பிடித்தவர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களிடம் இருக்கும் பண்புகளுக்காகவே மற்றவர்கள் இவர்களை ரசிப்பார்கள். |
| எண் 5 | 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பதுமையான மாற்றத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். நகைச்சுவையாக பேசி மற்றவர்களை இலகுவில் கவர்வார்கள். குறும்புத்தனம் செய்து மற்றவர்களை ஈர்ப்பார்கள். |
| எண் 1 | 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். கலைஞர்கள் போன்று தங்களை வெளியில் காட்டிக் கொள்வார்கள். புத்திசாலிகளாகவே இருப்பார்கள். மற்றவர்களை விரும்ப வைப்பதற்காகவே இவர்கள் நல்லவர்களாக காட்டிக் கொள்வார்கள். |
