முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை இயற்கையாக குறுகிய நாட்களில் எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தற்போது இருப்பவர்களுக்கு இந்த கரும்புள்ளி ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதை இல்லாமல் செய்வதற்கு பலரும் பியூட்டி பார்லர் சென்று பணத்தை செலவு செய்கின்றனர்.

ஆனால் அது பொலிவு கொடுப்தோ குறைவு. ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் தான் பொலிவை கொடுக்கும்.

ஆனால் நாம் இற்கையாக செய்யும் தீர்வுகள் சருமத்தை நிரந்தர பொலிவிற்கு கொண்டு வரும். எனவே கரும்புள்ளிகளை போக்கும் இயற்கையான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தின் விடாப்பிடியான கரும்புள்ளியை எப்படி இயற்கையாக நீங்குவது? | How To Remove Dark Spots Naturally

பேக்கிங் சோடா

  1. பேக்கிங் சோடா சமையலுக்கும் மட்டுமல்ல உங்கள் சருமத்தை பொலிவாக்கவும் பயன்படுகிறது.
  2. இதில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை  அகற்றி, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெற உதவுகிறது.
  3. பேக்கிங் சோடா சருமத்தின் pH ஐ நடுநிலையாக்க உதவுகிறது. இது சருமத்தை குறைந்த எண்ணெயை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கிறது.
  4. எனவே பேக்கிங் சோடாவை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல மாற்றி அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசி வந்தால் கரும்புள்ளி மறைந்து போகும். 

பட்டை

  1. இலவங்கப்பட்டை சமயலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளாகும்.
  2. இது நறுமணம் மிக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உருவாக்க உதவுகிறது.
  3. அது கரும்புள்ளிகளை அகற்றுவது உட்பட சருமத்திற்கு பல வகையான நன்மைகளையும் தருகிறது.
  4. இறந்த செல்கள் மற்றும் முகப்பருவை நீக்க உதவுகிறது.
  5. இலவங்கப்பட்டை அரைத்து பொடியாக்கி அதை ரோ வாட்டருடன் சேர்த்து பூசி வந்தால் கரும்புள்ளி மறையும். 

தேன்

  1. தேன் சருமத்தின் மீது ஒரு இயற்கையான ஆன்டிபயோடிக்காக செயல்படுகிறது.
  2. முகப்பரு தொடர்பான கரும்புள்ளிகள் உள்ளவர்களுக்கு தேன் மற்றொரு சிறந்த தேர்வாக அமைகிறது.
  3. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கான கிருமி நாசினியாக செயல்பட்டு, கிருமிகள் அல்லது துளைகளை அடைக்கும் அசுத்தங்களை அழிக்கிறது.
  4. இதன் மூலம் கரும்புள்ளிகளை அகற்றகிறது. தேனில் உள்ள ஆண்டிபயாடிக் தன்மை, சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, கரும்புள்ளிகளை அழிக்க உதவுகிறது.
  5. மேலும் பளிச்சிடும் சருமத்தை பெறவும், ஈரப்பதற்கிற்கும் பயன்படுகிறது.
  6. இரவு துங்க முன்னர் தேன் கொஞ்சம் எடுத்து சருமத்தில் பூசி சுடு நீரால் கழுவினால் சரும பொலிவு கிடைக்கும். 

எப்சம் உப்பு

  1. இது நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு உப்பு அல்ல.
  2. இந்த உப்பு மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவையாகும்.
  3. இது மளிகை கடைகளில் கிடைக்காது மருத்துக் கடைகளில் தான் கிடைக்கும்.
  4. ஏனென்றால் இந்த உப்பு பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
  5. புண் தசைகளை குணப்படுத்துவது, கரும்புள்ளிகளை அகற்றுவது, இறந்த செல்கள் மற்றும் சரும துளைகளை படித்திருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு உதவுகிறது.
  6. இதை அரைத்து பொடியாக்கி ரோஸ்வாட்டர் தயிர் கடலைமாவுடன் சேர்த்து கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் பூசினால் சரும பொலிவு கிடைக்கும்.