வீட்டில் நமக்கு தெரியாமலே நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் மூலம் கஷ்டம் வந்து சேரும் என கூறப்படுகின்றது.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும் அது சின்ன துணி ஆக கூட இருக்கலாம். இந்த சக்தி சில நேரங்களில் நேர்மறை ஆற்றலாகவும் சில நேரங்களில் எதிர்மறை ஆற்றலாகவும் இருக்கும்.

நம்மை அறியாமலேயே, எதிர்மறை சக்தி கொண்ட பொருட்களை வீடுகளில் வாங்கி குவித்து விடுகிறோம். அதிலும் சில பொருட்களை தேவை அறியாமலே வைத்திருக்கிறாம்.

ஆனால் இதனால் பல தீமைகள் நம்மை வந்து சேரும். வாழ்க்கையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ, எதிர்மறை ஆற்றல் கொண்ட பொருட்களை நம்மை சுற்றி இருப்பது மிகவும் அவசியம்.

தவறியும் 3 பொருட்களை வீட்டில் வைக்காதீக்க - இரக்கமில்லாமல் சனி கஷ்டம் கொடுப்பார் | 3 Things To Avoid Keeping At Home Vastu Tips Tamil

நாம் செய்யும் கரும வினைக்கு பலன் தரும் சனியை ஒரு போதும் நாம் கோபபடுத்த கூடாது. ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நனியை கோபபடுத்துவதுடன் நமக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரப்படி கூறப்படுகின்றது. 

பலர் வீட்டின் மூலையில் உடைந்த மின்னணு பொருட்களை குப்பை போல போட்டு வைத்திருப்பார்கள்.  வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மூலையில் உடைந்த பொருட்களை வைத்திருப்பது வீட்டிற்கு கடுமையான நிதி நெருக்கடியைக் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. 

அதிலும் நாம் பாவனை செய்த இரும்பு பொருட்களை வீட்டில் துருப்பிடித்தவாறு வைத்திருந்தால் சனி தேவர் கோபப்படுவார் எனவும் மேலும் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

தவறியும் 3 பொருட்களை வீட்டில் வைக்காதீக்க - இரக்கமில்லாமல் சனி கஷ்டம் கொடுப்பார் | 3 Things To Avoid Keeping At Home Vastu Tips Tamil

இதன்படி வீட்டில் உடைந்த கடிகாரங்கள், துருப்பிடித்த இரும்பு அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் எங்கும் வைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என  கூறப்படுகின்றது. 

பலர் வீட்டில் பயனற்ற பழைய பொருட்களை வைத்திருப்பார்கள். இது மன உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது மற்றும் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கிறது.

தவறியும் 3 பொருட்களை வீட்டில் வைக்காதீக்க - இரக்கமில்லாமல் சனி கஷ்டம் கொடுப்பார் | 3 Things To Avoid Keeping At Home Vastu Tips Tamil

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலர் அதை செய்வது அரிதாக காணப்படுகின்றது. அங்குள்ள தொட்டிகளில் செடிகளை நட வேண்டும். இது சுற்றுச்சூழலை சுத்திகரித்து, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகின்றது.