பொதுவாகவே ஆண்களுக்கு சரி பெண்களுக்கும் சரி, திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகளும் கனவுகளும் நிச்சயம் இருக்கும்.
மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் யாராக இருந்தாலும் திருமண உறவில் இணைவார்கள். ஆனால் எல்லோருக்குமே இவர்கள் விரும்பியவாறே மணவாழ்க்கை அமைவதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது இவர்களின் திருமண வாழ்க்கையில் நேடியாகவே தாக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை போராட்டங்களும் சவால்களும் நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் தன்னிச்சையான தன்மை பெரும்பாலும் திருமண வாழ்வில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
புதனால் ஆளப்படும் இவர்கள் புத்திசாலிகளாகவும், இரட்டை இயல்பு கொண்டவர்களாகவும் இருப்பதால், இவர்களின் துணையால், இவர்களை புரிந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
இவர்களின் குணம் காரணமாக திருமண உறவில் அடிக்கடி மன கசப்பு ஏற்படுகின்றது. இது இவர்களுக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற அனுபவத்தை கொடுக்கும்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசியினர் எப்போதும் தங்களின் சதந்திரத்துக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் திருமண வாழ்க்கையிலும் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்புவது கிடையாது.
இவர்களின் இந்த பொறுப்பற்ற குணம் திருமண வாழ்வை போராட்டம் நிறைந்ததாக மாற்றிவிடும். பெரும்பாலும் இந்த ராசியினரின் வாழ்கை விவாகரத்தை நோக்கி செல்ல வாய்ப்பு காப்படுகின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ரகசியங்களை மறைத்து வைப்பதில் கில்லாடிகள்.
அவர்களின் தீவிர ஆர்வம் மற்றும் ஆதிக்க உணர்வின் காரணமாக, இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மோசமான அனுபவத்தையே கொடுக்கும்.
இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பதும், வெளிப்படையாக பேசாதவர்களாக இருப்பதும் கூட திருமண வாழ்கையை சிக்கலாக்கிவிடுகின்றது.