இந்த பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களிடமும் இருக்க வேண்டிய குணங்களில் ஒன்று தான் நேர்மை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் அரிதாகி வருகிறது.
ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வசதியை பொறுத்து விடயங்களை மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மோதலைத் தவிர்ப்பதற்காகவோ, மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதற்காகவோ அல்லது தங்கள் சொந்த நன்மைக்காகவோ பொய் கூறுவதை சிலர் வழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பெண்கள், அவர்களின் ராசிகளை பொறுத்து பொய்யை உண்மைப் போன்று கூறுவார்கள்.
அந்த வகையில், நேர்மையற்றவர்களாகவும், அதிகம் பொய் பேசுபவர்களாகவும் இருப்பவர்கள் என்னென்ன ராசிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

| மிதுனம் | மிதுன ராசியில் இருப்பவர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் இரட்டை இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பொய் சொல்வதில்லை, மாறாக பெரும்பாலும் விஷயங்களை சுவாரஸ்யமாக வைத்துக் கொள்வதற்காகவும், அவர்களின் நன்மைகளுக்காவும் பொய் கூறுவார்கள். |
| விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் தீவிரமான மற்றும் ரகசியமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்கள் இலக்குகளை அடைய அல்லது ஒரு சூழ்நிலையின் மீது கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல பொய் கூறுவார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் தந்திரமான மனம் அவர்களை வஞ்சகத்தின் சிக்கலான வலைகளில் மாட்டி விடும். பெரும்பாலும் அவர்களின் உண்மையான நோக்கங்களை மறைத்து வைப்பார்கள். |
| துலாம் | அன்பு அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் பிறந்த பெண்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலை ஏற்படுத்த போராடுவார்கள். இப்படியான நிலையில், பொய் கூறுவதற்கான வாய்ப்புகள் அமையும். இராஜதந்திரிகளாக இருக்கும் இவர்கள் மோதல் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். பொதுவாக தீங்கு விளைவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப பொய் கூறுவார்கள். |
