ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி,நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பெற்றோரை பெருமைப்படுத்தும் அளவுக்கு எதிர்காலத்தில் சாதனையாளர்களாக மாறுவார்களாம். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகுந்த திறமைசாலிகளாகவும் லட்சிய வாதிகளாகவும் இருப்பார்கள்.
அவர்களின் வாழ்வில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் அவர்களின் குடும்பத்தை குறிப்பாக அவர்களின் பெற்றோரை கவனத்தில் கொண்டே எடுப்பார்கள். பெற்றேருக்கு விரும்பமில்லாத விடயங்களில் இவர்கள் ஆர்வம் செலுத்துவது கிடையாது.
இந்த ராசி பெண்கள் நிச்சயம் பெறறோரை பெருமைப்படுத்தும் அளவுக்கு எதிர்காலத்தில் பெரிய விடயங்களை சாதிப்பார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் பெற்றோர்களின் உள்ளுணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பெற்றோர்களின் கட்டுப்பாடு இன்றியே நல்ல பாதையை நேர்ந்தெடுகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சந்திரனால் ஆளப்படும் இவர்கள் தங்கள் பெற்றோர் மீது அதீத அக்கறையும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களின் பெற்றோர்களை மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு பெருமைப்படுத்துவார்கள்.
கன்னி
கிரகங்களின் இளவரசனாக கருத்தப்படும் புதன் கிரகதால் ஆளப்படும் கன்னி ராசி பெண்கள் இயல்பாகவே புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதிலும் இவர்கள் மீது பாசத்தை பொலிவதிலும் துளியும் குறை வைக்கவே மாட்டார்கள்.
இவர்கள் தங்களின் குடும்பம் சமூகத்தில் மரியாதையுடன் மதிப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். இந்த குணம் இவர்களை சாதனையாளர்களாக மாற்றுகின்றது.