தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதுவரை இல்லாத அளவில் புத்தம் புதிய ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக உலக சினிமாக்களில் பணிபுரிந்த ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலீஸ் கதை என்பதால் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும். இதன் காரணமாக படக்குழு இப்படியான முயற்சியை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.