ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசிக்கும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக நேர்மையும் விசுவாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி துரோகம் என்ற நாமமே அறியாமல், உண்மையின் சின்னங்களாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கடக ராசி
கடக ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
பொய் சொல்வதாலும் ஏமாற்றுவதாலும் மற்றவர்கள் காயப்படுவார்கள் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த இவர்கள் யாருக்கும் மனதளவிலும் துரோகம் செய்ய நினைக்கவே மாட்டார்கள்.
கடக ராசியை சேர்ந்த ஆண்களும், பெண்களும், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
2. மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் தவறியும் மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாட மாட்டார்கள்.
நேர்மையாக இருப்பதால் எவ்வளவு துன்பம் வந்தாலும் இவர்கள் தங்களின் குணத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
தங்களின் வாழ்க்கை துணைக்கு கனவிலும் துரோகம் நினைக்க மாட்டார்கள். அனைத்தையும் அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உருதியாக இருப்பார்கள்.
3. கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் நீதியின் கடவுளான சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் மற்றவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள்.
எப்போதும் சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்களாகவும் மனதில் எதையும் மறைத்து வைக்க தெரியாதவர்களாகவும் இருப்பாரை்கள்.
அதிக பிடிவாத குணம் கொண்ட இவர்கள் வாழ்க்கை துணைக்காக எதையும் மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.