சீனாவை சேர்ந்த தம்பதி குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வைத்துள்ள விநோத காரணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த தியான் மற்றும் ஜாவோ தம்பதி தங்களது குடும்பத்தை மேலும் விரிவுபடுத்தும் வினோதமான முடிவை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே 9 குழந்தைகளின் பெற்றோராக இருக்கும் இவர்கள், சீன ஜோதிடத்தின்படி 12 ராசிகளையும் தங்கள் குழந்தைகளின் ராசிகளில் பிரதிபலிக்க விரும்புகின்றனர்.

2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு இரட்டையர்கள் உட்பட 9 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது உடல்நிலை சரியில்லாததால் குழந்தை பெறுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், விரைவில் மேலும் 4 குழந்தைகளை பெற்று 12 ராசிகளையும் நிறைவு செய்யும் தங்கள் இலக்கை அடைய விரும்புகின்றனர்.

இது தொடர்பாக தியான் கூறுகையில், "என் குழந்தைகளில் இரண்டு பேர் மட்டுமே ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு ராசிகளைச் சேர்ந்தவர்கள். சீன ஜோதிடத்தின்படி, 12 ராசிகளும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பது நல்லது என்று நம்புகிறேன்.

எனவே, எங்கள் குடும்பத்தில் இன்னும் நான்கு ராசிகள் இல்லாததால், அவற்றை நிறைவு செய்ய விரும்புகிறோம்" என்றார்.

இத்தம்பதியின் இந்த வினோதமான ஆசை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.