பொதுவாக சாஸ்திரங்களின் பிரகாரம் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கப்படும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.

தலையை மொட்டையடித்து கொள்வது என்பது  இந்துக்கள் மற்றும் அன்றி இஸ்லாமியர்கள் பொளத்தர்கள் என பலரும்  பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காகும்.

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

மதங்களின் பிரகாரம் தலைமுடி என்பது பெருமையான ஒரு விடயமாகும். அதனை கடவுளுக்கு காணிக்கையாக அளிப்பதன் மூலம், நம் செருக்கும், ஆணவமும் நம்மை விட்டு நீங்கும் என நம்பப்படுகிறது.

மறுபிறவி மீது பல்வேறு மதங்களுக்கும் நம்பிக்கை காணப்ப்படுகின்றது. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிக்கும் நோக்கம் கருதியே இந்து மதத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகின்றது. 

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.

குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் மொட்டையடிக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கருத்துக்கள் இருக்கும் அதே நேரம் இஸ்லாமிய பாரம்பரியத்தில், இது 7 முதல் 40 நாட்களுக்குள் குழந்தைகளுக்கு மொட்டையடிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

உண்மையில் மொட்டை அடிப்பதற்கு சரியாக வயது எது? குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதன் பின்னணியில் இருக்கும்  அறிவியல் காரணம் குறித்தும் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

 அறிவியலின் பிரகாரம் குழந்தைகளை சூரிய ஒளியில் ஆடையின்றி முடியின்றி வைத்திருக்கும் போது அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் டி விரைவாக உரிஞ்சப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

மேலும் குழந்தையின் முடி பிறக்கும் போது  சீரற்றதாக இருக்கும், சீரான முடி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே முக்கியமாக மொட்டையடிக்கப்படுகின்றது.

அறிவியல் கண்ணோட்டத்தில் மொட்டையடிப்பது நரம்புகள் மற்றும் மூளையின் சரியான வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

வெயில் காலத்தில் குழந்தையின் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் மொட்டையடிப்பது பெரிதும் நன்மை பயக்கும். 

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

சாஸ்திரங்களின் பிரகாரம் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்ற போதிலும் மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி  குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த வயது 1 வயது முதல் 3 வயது வரை என வரையறுக்கப்படுகின்றது. 

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான் | What Is The Reason For Baby Tonsure

இந்த வயதில் மொட்டையடிப்பதனால்  குழந்தையின் மயிர்கால்களுக்கு அருகில் காணப்படும் சுரப்பிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் இந்த வயதில்  மொட்டையடிப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. 

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மொட்டை அடிப்பதால் அவர்களின் எலும்புகள் சேதமடையும் வாய்ப்பு காணப்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.