முந்திரிப் பருப்பு நட்ஸ் வகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை கொடுக்கின்றது.

தற்போது கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் முந்திரி பருப்பானது சீக்கிரமே கெட்டுப் போய் விடுகிறது. இதனால் வாங்கியவுடன் சாப்பிட்டு முடிப்பது சிறந்தது.

அதிலும் குறிப்பாக சில இடங்களில் தரம் குறைந்த போலியான முந்திரிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவை பார்ப்பதற்கு அசல் முந்திரிப் பருப்பு போன்று இருந்தாலும் சில அறிகுறிகளை வைத்து போலியானதை கண்டுபிடிக்கலாம்.

அந்த வகையில், போலியான முந்திரிப் பருப்பை எப்படி கண்டுபிடிக்கலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Kitchen Facts: போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பது எப்படி? இனி ஏமாறாதீங்க! | How To Identify Fake Cashew Nuts

 

1. முந்திரி பருப்பு கடைகளில் வாங்கும் பொழுது அதன் நிறம் சற்று மஞ்சளாக இருக்கும். அப்படி இருந்தால் அது போலியானது. ஏனென்றால் நல்ல முந்திரி எப்போதும் வெள்ளையாக மட்டுமே இருக்கும். அதன் சுவையும் எந்தவித மாற்றமும் இருக்காது.

2. முந்திரி பருப்பின் மேல் கறைகள், கருமை அல்லது துளைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை வாங்க வேண்டாம். இதனால் வயிற்றில் கோளாறுகள் ஏற்படலாம்.

Kitchen Facts: போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பது எப்படி? இனி ஏமாறாதீங்க! | How To Identify Fake Cashew Nuts

 

3. முந்திரி வாங்கும் போது அதை நுகர்ந்து பார்த்து வாங்குவது சிறந்தது. லேசான வாசனையில் இருந்தால் அது தான் தரமான முந்திரியாகும். மாறாக அதிலிருந்து வரும் வாசனை அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுது முந்திரியின் தரம் குறைவாக இருக்கலாம்.

4. கடைகளில் முந்திரி வாங்கும் போது அதன் நீளம் ஒரு அங்குலம் தடிமனாக இருக்கும். இதுவே தரமான முந்திரியாக பார்க்கப்படுகின்றது. அளவில் மாற்றம் இருந்தால் அந்த முந்திரிகள் சில சமயங்களில் போலியானதாக இருக்கலாம்.

Kitchen Facts: போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பது எப்படி? இனி ஏமாறாதீங்க! | How To Identify Fake Cashew Nuts

5. பொதுவாக தரமான முந்திரியின் விலை எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதிலும் அந்த முந்திரிகள் எப்போதும் கெட்டுப்போகாது. அதே சமயம் முந்திரி பருப்பு வாங்கி வைத்து கெட்டு போனால் அதன் சுவை, மணம், மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்படும்.