பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
சாணக்கியர் பல்வேறு துறை சார்ந்த விடயங்களிலும் தெளிந்த அறிவுகொண்டவராக இருந்தார். இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து தகவல்களின் பிரகாரம் வாழ்வில் நிதி ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கும், பணப்பிரச்சினையின்றி வாழ்வதற்கும் பின்பற்ற வேண்டிய முக்கிய பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால், எதிர்காலத்துக்காக பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
வருமானத்தில் அத்தியாவசிய செலவுகளை செய்தப்பின்னர் நிச்சயமாக ஒரு பங்கு பணத்தை சேதித்து வைப்பது உங்களுக்கு எதிர்காலம் குறித்த பயத்தை இல்லாமலாக்க பெரிதும் துணைப்புரியும்.
கடன் வாங்கும் பழக்கம் மனிதர்களின் மனஅமைதியையும், நிம்மதியையும் சீர்குழைக்கும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
நிதி நிலையில் உச்சத்தை அடைய வேண்டும் என்றால், முடிந்த வரையில் கடனில்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படியும் கடன் வாங்க நேர்ந்தால் அதனை திருப்பி செலுத்தும் வழிகளை முதலில் சீர்செய்துக்கொண்டு தெளிவான திட்டத்துடன் கடன் வாங்க வேண்டும். திருப்பி வழியில்லாத போது முற்றிலும் கடன் வாங்குகதை நிறுத்திவிட வேண்டும்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால், தேவையற்ற செலவுகளுக்கு பணத்தை வீணாக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
செலவினங்களைத் துல்லியமாக மதிப்பிட்டு, கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ற வகையில் நிதியை முகாமைத்துவம் செய்யும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு வாழ்வில் பணப்பிரச்சினை வருவதே கிடையாது.
சாணக்கியர் கருத்துப்படி சரியான முதலீட்டின் மூலம் மட்டுமே நிதி வளர்ச்சி கபாத்தியமாகின்றது என்கின்றார். இதாவது பணத்தை சேமித்ததால் அதே பணம் இருக்கும்.
ஆனால் சரியான விடயத்தில் பணத்தை முதலீடு செய்ய தெரிந்தவனுக்கு நிதியை பெருக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வதை விடவும் பல இடங்களில் முதலீடு செய்வதால் பணத்தை இழக்கும் அபாயம் குறைவதுடன் வருமானமும் அதிகரிக்கின்றது.
பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் இது குறித்து தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
சாணக்கிய நீதிப்படி, நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு துறை சார்ந்த அறிவு இன்றியடையாதது.
வாழ்வில் வெற்றியடைவதற்கும் நிதி ரீதியில் சிறந்த வளர்ச்சியை காணப்தற்கும் தெரியாத விடயங்களை தேடி படிக்கும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பழக்கங்கள் அனைத்தும் கொண்டவர்களுக்கு வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.