ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் மனகிளர்ச்சி அடைபவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வித்தியாசமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் பொதுவாகவே அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள். இதனால் திருமணத்துக்கு பின்னர் இவர்கள் பொறுப்பற்ற வகையில் முடிவுகளை எடுக்கக்கூடும்.
அவர்கள் சுதந்திரத்துக்கும் சுய விருப்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அவர்களுக்கு திருமண உறவில் இருப்பது சற்று சவாலான விடயமாக இருக்கும்.
இவர்களிடம் காணப்படும் அதிக கோபம் மற்றும் போட்டித்தன்மை திருமண உறவில் மோதல்களுக்கும் சண்டைகளுக்கும் வலிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஆண்கள் இயல்பிலேயே லட்சியவாதிகளாக இருப்பார்கள்.இதனால் இந்த ராசியினர் திருமணத்துக்கு பின்னரும் தங்களின் இலக்கு மற்றும் அவர்களின் விருப்பங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதன் விளைவாக துணையின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பிக்கும். அதனால் திருமண வாழ்க்கை சற்று கசப்பான அனுபவமாக இருக்கும். உறவுகளை நிர்வகிப்பது இவர்களுக்கு பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கொஞ்சம் பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் விளையாட்டுதனமான குணம் திருமண வாழ்க்கையை பொருத்தவரையில் இவர்களை அக்கறையற்றவர்களாக மாற்றுகின்றது.
இவர்கள் துணையிடம் அதிக நேர்மையாக நடந்துக்கொள்ளும் விதத்தில் செய்யும் செயல்கள் துணையின் மனதை புன்படுத்துவதாக அமையும்.
இந்த ராசி ஆண்களக்கு ஒரே உறவில் நீண்ட காலம் நிலைத்திருப்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும்.